மம்தா அடக்குமுறை எதிர்ப்பு வலுக்கிறது
கொல்கத்தா, ஏப். 14-
மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசின் முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் செயல்பாடுகளை விமர்சித்து கார்ட்டூன் உருவாக்கி வெளியிட்ட பேராசிரியர் அம்பி கேஷ் மகாபத்ரா அக்கட்சியின் குண் டர்களால் கொடூரமாகத் தாக்கப் பட்ட சம்பவமும், அவர் கைது செய் யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட சம்பவமும் மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. காவல்நிலையத்தில் போலீசாரால் சித்ரவதைக்குள்ளாக்கப்பட்ட பேரா சிரியர் அம்பிகேஷ், ‘நான் ஒரு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர மான உறுப்பினர் என்று கட்டாயப் படுத்தி போலீசார் எழுதி வாங்கினர்’ என்று, ஜாமீனில் வெளிவந்த பிறகு தெரிவித்தார். கைது செய்யப்படுவதற்கு முன்பு ஏப்ரல் 12ம் தேதி இரவு திரிணாமுல் கட்சியைச்சேர்ந்த வெறிக்கும்பல் ஒன்று பேராசிரியர் அம்பிகேஷ் வீட்டை முற்றுகையிட்டு அடித்து நொறுக்கியது. அம்பிகேஷையும் அக் கும்பல் கடுமையான முறையில் தாக்கி யது.
ஆனால் அந்த வெறிக்கும்பல் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்தது. இது தொடர்பாக ஊடகங்களில் பரபரப் பாக செய்திகள் வெளியான பின்னரே சனிக்கிழமை நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். எனி னும், இரண்டே மணி நேரத்தில் அவர் களை விடுவித்துவிட்டனர். ஆனால் தனது விமர்சனத்தைக் கார்ட்டூன் வடிவில் வெளியிட்ட புகழ் மிக்க ஜாதவ்பூர் பல்கலைக்கழக வேதி யியல் துறை பேராசிரியரான அம்பி கேஷ் மீது காவல்துறையினர் பாலியல் சீண்டல் குற்றச்சாட்டு, பெண்ணுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத் துவது, கணினியை பயன்படுத்தி குற்றத்தில் ஈடுபடுவது, மானநஷ்டம் எனப் பல்வேறு பிரிவுகளில் புகார் பதிவு செய்துள்ளனர்.ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்த திரிணாமுல் அமைச்சர் தினேஷ் திரிவேதியை மாற்றிவிட்டு திடீரென அதே கட்சியைச் சேர்ந்த முகுல்ராயை ரயில்வே அமைச்சராக ஆக்கிய மம்தா பானர்ஜியின் செயல்பாட்டை விமர் சித்து மிகவும் சாதாரணமான ஒரு கருத்துப்படத்தை பேராசிரியர் அம்பி கேஷ் உருவாக்கி அதை தனது பேஸ் புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தது தான் ‘குற்றம்’.கருத்துச் சுதந்திரத்திற்கு எதிராக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மேற்கொண்டுள்ள தொடர்ச்சியான அடக்குமுறைகளில் ஒன்றாக, மேற்கண்ட பேராசிரியர் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்பட் டுள்ளது. இந்த அடக்குமுறைக்கு எதிராக வங்கம் முழுவதும் பெரும் கொந்த ளிப்பு ஏற்பட்டுள்ளது. ஜாதவ் பூர் பல் கலைக்கழக பேராசிரியர்கள்-மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். ஆனால் பேராசிரியரை கைது செய்தது சரிதான் என்று மம்தா பானர்ஜி நியாயப்படுத்தி பேட்டி யளித்துள்ளார். இது கொந்தளிப்பை மேலும் அதிகரித்துள்ளது.
மேற்குவங்கத்தில் மம்தாவுடனும், மாவோயிஸ்டுகளுடனும் உடன் பட்டு, அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி அரசுக்கு எதிராக கங்கணம் கட்டிக்கொண்டு செயல் பட்ட பல்வேறு தளங்களில் இயங்கு கிற அறிவுஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் உள்பட பல தரப் பினரும் தற்போது மம்தாவின் உண் மை முகத்தை கண்டு அதிர்ச்சியடைந் துள்ளனர். இவர்கள் தங்களது கண் டனத்தை டுவிட்டர், பேஸ்புக் உள் பட பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர். பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தனது டுவிட்டர் பக்கத்தில், “வெட்கம்! வெட்கம்! ஒரு கருத்துப் படத்திற்காக பேராசிரியர் கைது செய் யப்பட்டிருக்கிறார். கருத்துச் சுதந் திரத்தின் மீதான மிகக்கடுமையான தாக்குதல்” என்று எழுதியுள்ளார்.“ஏற்கெனவே நூலகங்களில் எந்த பத்திரிகையை வாங்க வேண்டு மென்று பட்டியலிட்ட மம்தா பானர்ஜி, ஏராளமான பத்திரிகைகளுக்கு தடை விதித்தார்.
அடிப்படை சுதந்திரத்தின் மீதான தாக்குதல் இது. அவசர நிலை கொடூரங்களைவிட கொடுமையா னது. இப்போது பேராசிரியர் மீது தாக்குதல். மம்தாவை ஆதரித்த நபர் கள், ஊடகங்கள் தாங்கள் முன்வைத்த ‘மாற்றம்’ என்பதன் உண்மையான பொருளை உணர்கிறார்கள்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் எம்.பி., கூறியுள்ளார்.