Chennaizoom
Select Menu to go :
Select New Category:
SEARCH AD
Ad#
Example
AD588
 
HEALTH
7 Doctors
Accupunure Treatment
Ayurvedic Treatment
Banana Tree
Chicken65
Curd  தயிர்
Exercise
Expired Medicine
Health Tips
Human Body
Kidney Stone
Meditation easy way
Milk and Vitamin D
பாட்டி வைத்தியம்
Simple Home Exercise
Swine Flu
Experiance in Hospital
NEWS
Home
Afghanistan
Arab and Chine
Anna Hazare
Beautiful Earth View
Bulk Sms
Budget 2011-12
Buy Indian
Chennai Related Informations
Creator of Human Life
English Punctuation
Death Sentance
De Recognized University

Faith

Faith by Healing
Govt.Greviance Forum
Health
Human Right - A Woman
Human Right - B Woman
Indian Culture at Airport
Indian Top 10 List
Indian Top 10 Corrupted
Illusion
Jan Lokpal Bill
Jokes
Khasmir by Bhushun
Kids (GrandPa & GrandMa)
Kolaiveri by Dhanush
Liberhan Report
Life form Synthetic cell
Lokayukta Report
Kiran Bedi's Motivation
Kolaiveri Songs
Metro Train
M.F.Hussain
MonoRail
Mobile Lost
Mullai Periyar
National Award 2010
Photos of your body
Quotes
Register Marriage
Religion Related Information
Repo Rate
RTI activist murdered
T.N. Election Result 2011
T.N. Local Election 2011
T.N. Ministers 2011
Scholarship available
Superstition மூடநம்பிக்கைகள்
Stress and Strain
Tamil Related Informations
Tirunelveil Colleges
Traffic Ramaswamy
Telecom Regularity Authority of India.
Transport
Vachathi. Criminals.
Women in Military Photos
World richest man
 
Google Groups
Visit this group
Subscribe to ChennaiZoom Real Estate. India
Email:
 
CHENNAI INFORMATIONS

Anna Library Kotturpuram

Auto Fare 2007
Be Indian
Budget 2010
CVCommission Advise
CVCommission Penality
Corporation Acievements
Chennai Cops
Corporation Councillors
Corruption
Credit Card
Development
Encroachment
Financial Planinning
Govt Web Sites
Health
Hospital Phone
Online Grievance Forum
Projects in north chennai
T.N.Election 2011
Tamil Nadu
Tamil Sites
T.N.MLAs 2011
T.N.Ministers 2011
The Boss
The Cops
Transport
PREMIUM AD
Accounts Package
Guest House Available
Hyundai Car Showroom
ICICI Prudential 
K7 Antivirous
Karapakkam Plot sale
Kovai Plot sale
Logistic Service Available  
Madamabakkam New Flat Sale
Mahindra Car Show Room
Maraimalai Nagar Land for sale
Mutual Fund
Pallikaranai Plot sale
Perungudi House for Sale
Salavakkam Plot for sale
 
Thiruvallur DTCP plot available
Uthandi Approved Plot sale



Chennai | Corruption | Health | Jokes | Religion | Tamil | Tamil Nadu | Transport | Women

மருத்துவ துறையில் அந்நிய மூலதனம்

தேச சுகாதாரம் கொள்ளைபோகிறது!
-என்.சிவகுரு

சமீபத்தில் இந்தியாவின் அனைத்து முன்னணி நாளிதழ்களிலும் பிரதானமாக ஓர் செய்தி வந்தது. பலர் அதை படிக்க தவறியிருப்பார்கள். சிலர் அதிர்ச்சிக்குள் ளாகினர். மேலும் சிலருக்கு பலத்த ஆச் சரியம்! அப்படி என்ன செய்தி?

‘இந்தியாவின் மருந்து துறையில் அந்நிய மூலதனத்தின் மேலாதிக்கம் அதி கமாகி வருவதை கண்டு மத்திய அரசு (அமைச்சரவை) பெருங்கவலையைத் தெரிவித்துள்ளது. இது தொடருமானால், ஒட்டுமொத்தமாக பன்னாட்டு நிறுவனங் களின் கட்டுப்பாட்டில் நாட்டின் கேந்திர மானதுறை அடிமைப்பட்டுவிடும் அபா யம் உள்ளது’ என மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியை படித்துவிட்டு, நம் மால் எப்படி அதிர்ச்சியடையாமல் இருக்க முடியும்?

செப்டம்பர் 5ம் தேதி செய்திக்கு பிறகு இரண்டு நாளிதழ்களில் (தீக்கதிர் மற்றும் தினமணி) அக்கறையோடு தலையங்கம் எழுதி தங்கள் கவலையை வெளிப்படுத் தினர்.

உண்மை நிலை

இந்திய மருந்து துறையில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய முன்னணி நிறு வனங்கள் பெரும் விலை கொடுத்து பன் னாட்டு நிறுவனங்களால் வாங்கப்படு கின்றன. தங்கள் நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தொழில்செய்ய முடி யாமல் இருப்பதால், மக்கள் தொகையில் இரண்டாமிடத்தில் இருக்கும் இந்தி யாவை நோக்கி படையெடுக்கத் துவங் கினர். விளைவுகளை இன்று நாம் ஒவ் வொன்றாக அனுபவிக்கின்றோம்.

உலகமயக் கொள்கைகளால் சகல துறைகளிலும் பாதிப்படைந்துள்ள நாம், உயிரோடு விளையாடும் மருந்துத்துறை யில் அதை நேரடியாக சந்திக்கின்றோம்.

உலகிலேயே நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. வரும் பத்தாண்டுகளில் ஐந்தில் ஒருவர் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள் என வல்லுனர்கள் கருது கின்றனர். இப்படி இருக்கையில் மருந்துத் துறையோ அந்நியரிடம் போவது எப்படி இருக்கும்?

இன்றைய நிலை

உலக அளவில் மட்டுமல்ல, இந்தியா விலும் மருந்து உற்பத்தி மற்றும் விற் பனை மிக லாபகரமான தொழிலாக இருந்து வருகின்றது. சுதந்திர இந்தியா வில் மருந்துத்துறைக்கு என்று கட்டுப் பாடுகள் மற்றும் சட்டங்கள் இல்லாத துவக்க காலத்தில், பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் தங்கள் இஷ்டப்படி மருந்து கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் கொள்ளையடித்து வந்தன. ஆனால், தொடர்ந்து உருவாக்கப்பட்ட சட்டங்கள் மற்றும் இந்தியாவின் பொதுத்துறை நிறு வனங்களும் இவர்களின் ஆதிக்கத்தை வெகுவாக குறைத்தன. மக்களுக்கும் கட் டுப்படியான விலையில் மருந்துகள் கிடைக்கப் பெற்றன.

ஆனாலும் கடந்த இருபது ஆண்டு களாக அனைத்து சட்டங்களும் மாற்றப் பட்டு, திருத்தி அமைக்கப்பட்டு (உபயம்: தனியார்மயம் - உலகமயம் - தாராளமயம்) விட்டதால் மீண்டும் ஆட்டம் ஆடத் துவங்கிவிட்டார்கள். விளைவுகளை நாம் சந்திக்க துவங்கியுள்ளோம்.

வேகமாக தாக்கும் நோய்கள்

உலகின் இரண்டாவது மக்கட் தொகையை நாம் கொண்டுள்ளதால், நமது நாடு மருந்து துறைக்கு பெரும் சந் தையாக மாறியுள்ளது. மற்றைய நாடு களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மருத் துவ வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்கள் சற்று குறைவாக உள்ளபோதிலும், சிகிச் சைக்காக இந்தியாவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கு பல்வேறு காரணங் கள் உண்டு. எனினும், செலவினங்கள் என்பதே முக்கிய காரணிகள்.

இது ஒருபுறம் இருக்க, புதுப்புது நோய் கள் வேகமாக மக்களைத் தாக்கி வருகின் றன. இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று, தொற்றுநோய்கள். இரண்டு வாழ்வு முறை நோய்கள் (அதாவது தொற்று நோய் அல்லாதது). உதாரணமாக நீரழிவு, இரத் தக்கொதிப்பு, இருதயக் கோளாறு, காச நோய்.

முதல் வகையான நோய்கள் பரவுவ தற்கு பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும் சுகாதாரமற்ற வாழ்விடங்கள், தண்ணீர், சுற்றுச்சூழல், வறுமை என்பன முக்கியமானவை.

இரண்டாம் வகைப்பட்டதற்கு மாறி வரும் கலாச்சாரமும் உணவுப் பழக்க வழக்கங்கள், அளவுக்கு அதிகமாக பயன் படுத்தப்படும் இரசாயனங்கள் என பல காரணங்கள் உண்டு.

இப்படி காரணங்கள் இருக்க, நோய் களும் அதிகமாகி பன்னாட்டு நிறுவனங் கள் தங்களின் லாப வேட்டைக்காக மக் கள் நலன்களுக்காக இயற்றப்பட்ட சட் டங்களை ஆட்சியாளர்களின் உதவி யோடு மாற்றிவிட்டனர்.

குறிப்பாக தேசிய அளவில் காசநோய் தடுப்புத்திட்டம் உருவாக்கப்பட்டு, செயல் முறைப்படுத்தப்பட்டு, சிகிச்சைக்கென அரசு மூலம் மருந்துகள் வழங்கப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பு காசநோய் சிகிச்சைக்கென மருத்துவம னைகள் உருவாக்கப்பட்டன. இப்போது கிட்டத்தட்ட இந்த திட்டங்கள் கை கழுவப்பட்டு மருத்துவமனைகள் காச நோயாளிகள் போல் எலும்புக்கூடுகளாய் காட்சியளிக்கின்றன. விளைவு, கடந்த மூன்று ஆண்டுகளில் காசநோயால் புதி தாக பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை அபாயகரமாக உயர்ந்துள்ளது. காரணம், பாதிக்கப்பட்டவர்களை கண் டறிந்து மேல்சிகிச்சைக்கு பரிந்துரைப் பது, மருத்துவமனையில் உள் நோயாளி யாக பராமரிப்பது என அரசு கைவிரித்து விட்டதால் தனியாரிடம் சிகிச்சை பெற வேண்டிய நிலையில், தொடர்ந்து அதி கரித்து வரும் மருந்து விலையால் சிகிச் சையை பாதியிலேயே கைவிட்டோர் எண்ணிக்கையும் அதிகமாகியுள்ளது. சமீ பத்திய ஆய்வுகளின்படி ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு இரண்டு பேர் காச நோயால் இறக்கின்றனர். யோசித்துப் பாருங்கள், ஒரு மணிநேரம் - ஒரு நாள் - மாதம்-வருடம் என எத்தனை மரணங்கள்?

புற்றுநோயும்

பகாசுரங்களின் திமிரும்!

சமீபகாலமாக இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை உயர்ந்துகொண்டே வருகின் றது. இந்நோய்க்கான சிகிச்சை வெவ் வேறு கட்டங்களாகவும் வடிவங்களாக வும் உள்ளது. மற்ற நோய் சிகிச்சைகளைப் போலவே அரசுக்கும் இதற்கும் பெரும் தொடர்பே இல்லை. நாங்களும் ஏதோ செய்கின்றோம் என்பதைப் போலத்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, பன்னாட்டு நிறுவனங்கள் இதற்கான மருந்து உற்பத்தி மற்றும் விற் பனையில் கொள்ளையடித்து வருகின்றன.

அப்படி வந்ததுதான் தற்போது இந்திய நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நுகர் வோர் பாதுகாப்பு சட்டங்களையே வளைக்க முஷ்டி தட்டிக் கொண்டிருக்கும் நோவார் டிஸ் (சூடிஎயசவளை) எனும் நிறுவனம்.

பன்னாட்டு நிறுவனமான நோவார் டிஸ் தன்னுடைய தயாரிப்பான கிளிவெக் (ழுடiஎநஉ) எனும் மருந்தை ரத்தப் புற்று நோய்க்கான சிகிச்சைக்கு அறிமுகப் படுத்தியது. இதற்கு முன்னரே இந்திய முன்னணி மருந்து நிறுவனங்கள் இதற்கு இணையான மருந்தை விற்பனை செய் தன. விஷயம் என்னவென்றால், பன் னாட்டு நிறுவனத்தின் மருந்தைவிட இந் திய மருந்து நிறுவனங்களின் விலை மிக மிகக் குறைவு. (அதாவது ஒரு மாத்தி ரைக்கு 84சதவீதம்) விலை கணக்கில் பார்த்தால் ஒரு மாத்திரைக்கு ரூ.450 குறையும். நிலை இப்படி இருக்க, நோவார் டிஸ் நிறுவனம் இந்தியாவில் பின்பற்றப் படும் காப்புரிமைச் சட்டத்தையே கேள் விக்குறியாக்கி, தனக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்திட கோடிகோடியாய் செலவு செய்கின்றது. சென்னை உயர்நீதிமன்றத் தில் நடந்த இவ்வழக்கின் தீர்ப்பு பன் னாட்டு நிறுவனத்திற்கு எதிராக அமைந் தது. ஆனாலும் விடாமல் உச்சநீதிமன் றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய் துள்ளது இந்நிறுவனம்.

மருந்து குறைந்த விலையில் கிடைக் கக் கூடாது; மக்கள் பயன்பெறக் கூடாது; இந்திய சட்டங்களை வளைப்பதற்காகவே என திமிரோடு செயல்படும் இந்நிறு வனத்தை ஆள்வோரால் தட்டிக்கேட்க முடியவில்லை!

இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங் களின் கைகளில் மேலும் இந்திய மருந் துத்துறை சிக்கினால் என்னவாகும்!

உடனடி தேவைகள், கடமைகள்

இன்றும் சுகாதாரம் மற்றும் உடல் நல பாதுகாப்பு என்பதெல்லாம் உரிமைகள் இல்லை. மாறாக, அது காசு கொடுத்து பெறவேண்டிய ஒன்றாக மாறிவிட்டது. பேறு கால மரணங்கள், இளம் குழந் தைகள் ஊட்டச்சத்து இன்மையால் மரணம் என்பது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்ற விஷயங்கள் என்றுமே முதன்மைச் செய்திகளாக வெளியிடப் படுவதில்லை. வல்லரசாக மாறவேண் டும் என்று ஒரு பக்கம் கோஷங்கள் எழுப் பப்படுகின்ற இந்நேரத்திலும் தடுக்கப்பட வேண்டிய மரணங்கள் தொடர்நிகழ்வாக உள்ளன.

மத்திய அரசு திட்டமான தேசிய கிரா மப்புற சுகாதார மேம்பாட்டுத் திட்டம் கடந்த ஐந்தாண்டுகளாக குறைந்த திட்ட முதலீட்டினால் வலுவிழந்துள்ளது. மாநில அரசுகளோ தங்கள் வசதிக ளுக்கேற்பவும் தேவைக்கேற்பவும் திட் டங்களை உருவாக்கி செயல்படுத்தி வரு கின்றன. ஆனாலும் மக்களின் தேவைக் கேற்ப இத்திட்டங்கள் நிறைவேற்றப்படு வதில்லை. இத்தனை அம்சங்களையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு தான் பன்னாட்டு நிறுவனங்களின் ஆடு களமாய் இந்தியா மாறி வருகின்றது. இதே நிலை நீடித்தால் நாட்டின் மருந்துத் துறையின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கு மாறிவிடும். போதாக்குறைக்கு, இந்தியா வின் பெரும் நிறுவனங்களை (ரான்பாக்சி, பிரமல் குழுமம்) பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளன. இப்பட்டியல் நீளும் - தொடரும்.

இதற்கு கட்டுப்பாடு வைக்கப்பட வில்லை என்றாலும் சிரமம் தான்.

உலகின் மிகச் சிறந்த வல்லுநர்களும், தொழில்நுட்பமும் அசாத் திய உழைப்புத் திறனும் கொண்ட நம் நாட்டில் தடையே இல்லாமல் காட்டாற்று வெள்ளம் அடித் துச்செல்வது போல் அனுமதித்தால் வருங்காலம் கேள்விக்குறியாகும்! நமது எதிர்கால சந்ததியும் சந்தியில் நிற்கும்! இந்தியாவின் மருந்துத்துறையை பாது காத்திட மக்களி டத்தில் இப்பிரச்சனை களை பேசுவதே, தெளிவுபடுத்துவதே பிர தானக் கடமையாகும்.
 
   Post Your News Feed Back Enquiry Now Refer a Friend
To Post your News, You have to login first.
Comments    (Login first)